தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியா 3 மாதங்களுக்குப் பிறகு கடந்த 21ம் திகதியிலிருந்து வழமைக்கு திரும்பியுள்ளது. அந் நாட்டில் கடந்த 3 மாதங்களாக தடை செய்யப்பட்டிருந்த சகல அன்றாட நடவடிக்கைகளையும் மீண்டும் அமுலுக்கு கொண்டு வந்துள்ளது சவுதி அரேபியா.
இந் நிலையில் சவுதி அரேபியாவிலிருந்து கொரோனா கெடுபிடிகளுக்கு முன்னர் தங்கள் நாடுகளுக்கு விடுமுறையில் சென்றவர் சவுதி அரேபியாவிற்கு மீளத் திரும்ப முடியாமல் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அவர்களுக்கு மீளத் திரும்ப வழங்கப்பட்ட விசாக் காலமும் முடிவடைந்துள்ளதாகவும், விமான பயண சீட்டுக்களும் காலாவதியாகிவிட்டதாகவும் பலர் முறையிடுகின்றனர்.
இது போன்ற பல வளைகுடாத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள சம்மாந்துறை24 இணையத்தளத்தோடு இணைந்திருங்கள் எங்களது முகநுால் பக்கத்தினையும் லைக் செய்திடுங்கள் https://www.facebook.com/Sammanthurai24News/
நீங்கள் மீளத் திரும்வுதற்காக உங்களுக்கு வழங்கப்பட்ட விசாக் காலம் (Exit Re Entry Visa) முடிவடைந்திருந்தாலும் அவைகள் தானாக (Automatic) நீடிக்கப்படுவதாக சவுதி அரேபியா அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது அதனடிப்படையில் சவுதிக்கு மீளத் திரும்புவதற்கான தடை நீக்கப்படும் போது நீங்கள் சவுதியில் பணிபுரிந்த உங்களது நிறுவனங்களை தொடர்பு கொண்டு உங்களுக்கான பயண ஏற்பாடுகளை செய்து மீண்டும் சவுதிக்கு நிச்சயம் வர முடியும். இது விடையத்தில் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.