Ads Area

பெருமளவு ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ள சவுதி அரம்கோ நிறுவனம்.

உலகின் மிகப்பெரிய எரிபொருள் ஏற்றுதி கம்பனியான சவுதி அரம்கோ (Saudi Aramco) ஆட்குறைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

விற்பனை சந்தையில் எரிபொருள் விலை குறைப்பு காரணமாக வௌிநாட்டுப் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யப்படுவதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சவுதி அரம்கோ நிறுவனத்தில் சுமார் 80,000 பேர் வரை பணியாற்றுகின்றனர். வருடாந்தம் ஆட்குறைப்பை மேற்கொள்கிறது. எனினும் இம்முறை வழமைக்கு மாறாக அதிக எண்ணிக்கையானவர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.

“அரம்கோ சிக்கலான, மாறிவரும் வணிகச் சூழலுக்கேற்ப தம்மை மாற்றி வருகிறது. “இந்த நேரத்தில் எந்தவொரு செயலின் விவரங்களையும் பற்றிய தகவல்களை நாங்கள் வழங்கவில்லை, ஆனால் எங்களது அனைத்து செயல்களும் நீண்டகால வளர்ச்சியை மையமாகக் கொண்டு போட்டித்தன்மையை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன.”

அரம்கோ நிறுவனத்தின் வருடாந்த இலாபம் இவ்வருடம் முதல் காலாண்டில் 25 வீதத்தால் சரிந்துள்ளது. கொவிட் 19 காரணமாக இக்கம்பனிக்கு ஏற்பட்டுள்ள நட்டம் 62.5 ரியால் ($16.6 billion) ஆகும். 

(வேலைத்தளம்)
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe