சவூதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (25.06.2020) புதிதாக 3,372 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 170,639 ஆக உயர்ந்துள்ளதாக சவுதியின் சுகாதார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் 117,882 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இன்று மட்டும் 5,085 பேர் குணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.