சவுதி அரேபியாவில் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள வைத்தியசாலைகளில் கொரோனா பிரிவுகளில் வேலை செய்து வந்த பங்களாதேஸ் நாட்டைச் சேர்ந்த 5 வைத்தியர்கள் பலியாகியுள்ள சம்பவம் பங்களாதேஸ் நாட்டவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவுக்கான பங்களாதேஸ் துாதுவர் கொலோம் மோர்சி (Golam Moshi) இது குறித்து கூறுகையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரவு பகல் பாராது அயராது சேவை செய்து தங்களது உயிர்களையே தியாகம் செய்த இந்த வைத்தியர்கள்தான் உண்மையில் ஹீரோக்கள், அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
செய்தி மூலம் (விரிவான செய்திக்கு) - http://colombotimes.net
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.