(எஸ்.அஷ்ரப்கான் / எம்.என்.எம்.அப்றாஸ்)
காலாகாலமாக அம்பாரை மாவட்ட மக்கள் வாக்களித்த மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்ற கதிரையை சூடாக்கியதை தவிர வேறு எந்த உரிமையையும் பெற்றுக் கொடுக்கவில்லை என சட்ட முதுமாணி முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு முதலாவதாக களம் இறங்கியபோது குறிப்பிட்ட வாக்குகளை அளித்து மக்கள் எங்களுக்கு ஆதரவினை வழங்கினர்.
ஆனால் கடந்த முறை எல்லோரும் நீங்கள் வாங்களித்தவர்கள் உங்களுக்கு செயத்தது என்ன? அவர்கள் பாரளுமன்றம் சென்று கதிரைகள் சூடாக்கப்பட்டதே தவிர ஏதுவும் செய்யப்படாத நிலையிலே காணப்பட்டது.
எனவே தான் மாவட்டத்தில் இலட்சத்துக்கு மேல் வாக்களிக்க கூடிய சாத்தியம் உள்ள போதும் இந்த வாக்கு அதிகரிப்பை இந்த வேட்பாளர்கள் கட்சி அங்கத்தவர்கள் மாத்திரம் செய்து விட முடியாது. இந்த சமுகத்தில் அக்கறை உள்ளவர்கள் இவர்கள் தான் உங்களுக்காக என்றும் சேவை செய்பவர்கள் என நீங்கள் எங்களை நம்பினால் எதிர்வரும் தேர்தல் முடிவின் போது 3 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியை நீங்கள் ஒவ்வோருவரும் சொல்ல வேண்டும். எல்லாம் வல்ல இறைவனின் துணையுடன் நீங்கள் இதற்காய் முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் அம்பாரை மாவட்டத்தில் காத்திரமான உறுப்பினர்களை பெற முடியும்.
இம்முறை தேர்தலை மக்கள் மிகவும் புத்திசாதுரியமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது. என்றுமில்லாதவாறு இம்முறை பாராளுமன்றம் சிறுபாண்மைகளுக்கு பெரும் சவால் நிறைந்தததாக இருக்கும்.
இதன் தொடர்ச்சியில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அந்த யுத்த வெற்றியை சொல்ல முடியாது காலாவதியாகிப்போன ஒரு சூழ்நிலையில்தான் பண்டாரநாயக்காவின் யுக்தியை கையிலெடுத்து முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தைக் கக்கியதனால் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் அது அவர்களுக்கு அண்ணளவான வெற்றியை கொடுத்தது.
இந்த இனவாதத்தை வைத்துக்கொண்டு ஒரு சிறிய விகிதத்தில்தான் அப்போது அவர்கள் தோல்வியை கண்டார்கள். அந்த நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் தான் சரியான தேர்தல் வியூகம் என்று புரிந்து கொண்டு நல்லாட்சி காலத்திலும் அதன் பின்பும் நடந்த தேர்தல்களிலும் முழுக்க முழுக்க இனவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டு அதன் வெற்றியை கொண்டாடி கடந்த தேர்தலில் அவர்கள் அறுவடை செய்தார்கள்.
அதே இனவாத நடைமுறையைத்தான் இந்த பொதுத் தேர்தலிலும் அவர்கள் முன்வைக்கின்றார்கள்.
இதில் இனவாத காரணம் மாத்திரமே உள்ளது. ஏனென்றால் அவர்கள் பெருந் தேசிய வாதத்திற்கு கொடுத்த வாக்குறுதியின் ஊடாக தற்பொழுது முஸ்லீம்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாது என்கின்ற சூழ்நிலை இருக்கின்றது.
இந்த ஆட்சியில் எத்தனை முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தாலும் எரிப்புக்கு எதிராக அவர்களால் ஒன்றும் நடந்திருக்காது. ஆனால் அதுவல்ல இங்கே விடயம் இந்த நாட்டின் முஸ்லிம்கள் இரண்டாவது சிறுபான்மை மக்கள் என்பதால் எங்களுடைய விடயங்களில் மிதவாதப் போக்கை கடைப்பிடித்திருக்கலாம். அது நடந்ததா?
இந்த நாட்டின் ஜனாதிபதி வாக்களித்தவர்களுக்கு மாத்திரம்தான் ஜனாதிபதியா? இல்லையே வாக்கு போட்டவர்கள், போடாதவர்கள் அனைவருக்குமே அவர்தானே ஜனாதிபதி, அனைத்து நாட்டு மக்களையும் பெரும்பான்மை சிறுபான்மை என்ற பாகுபாடின்றி ஆட்சி செய்ய வேண்டிய கடமை இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு இருக்க வேண்டுமல்லவா?
பெரும்பான்மை மக்கள் சொல்வதைப் போன்றுதான் நாங்கள் ஆட்சி செய்வோம் என்றால் இந்த ஆட்சியின் நிலையைப் பற்றி என்னவென்று கூறுவது.
எனவேதான் இவ்வாறான ஆட்சியாளர்களிடமிருந்து எமது சமூகம் விடுதலை பெற வேண்டுமென்றால், சுபீட்சமாக எமது நாட்டிலே மூவினமும் வாழ வேண்டுமென்றால் இம்முறை சமூகம் சார்ந்த அக்கறையுள்ள, பொய் வாக்குறுதிகளுடன் காலத்திற்குக் காலம் மக்களை ஏமாற்றி விட்டு சுகபோகம் அனுபவிக்கின்ற அரசியல்வாதிகளை இம்முறை மக்கள் புறந்தள்ளி விட வேண்டும்.
இனி வரும் காலங்களில் அரசியல் முதிர்ச்சி பெற்ற, படித்த, சவால்களுக்கு முகம் கொடுக்கின்றவர்களை இனங் கண்டு மக்கள் சவால் நிறைந்த பாராளுமன்றுக்கு அனுப்ப வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் படித்த பண்புள்ள திறமையான வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். சென்ற தேர்தலை விட இம்முறை மக்கள் காங்கிரஸ் கட்சி இரண்டு ஆசனங்களை பெறுவதற்க்கான அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
இவ்வாறான மாற்றங்களுடன் உங்களைப் போன்ற இளைஞர்கள், படித்தவர்கள், புத்திஜீவிகள், பாமரர்கள் என பல தரப்பட்டோரும் எம்மோடு இணைய முன் வருவதானது மருதமுனையில் மாத்திரமல்ல அம்பாறை மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் மக்கள் அரசியல் ரீதியாக ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை வெளிக்காட்டுகின்றது என்றும் கூறினார்