கொரோனா 9 பேரைத் தான் கொன்றது என்றும், தான் ஆனையிறவில் ஒரே இரவில் 2000, 30000 பேரைக் கொன்றதாகவும், முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
அவரது இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் கருணாவின் இந்தக் கருத்தைக் கண்டித்துள்ளனர். அத்துடன், ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்கவும் கருணாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.