Ads Area

பாலைவனத்தில் வழிதவறி மாட்டிக் கொண்டவர் ஒன்றரை மாதங்களுக்குப் பின் சடலமாக மீட்பு.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள அல் அம்ரா என்ற பிரதேசத்தில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் கடந்த ரமலான் மாதத்தில் காணாமல் போயிருந்த நிலையில் தற்பொழுது பாலைவனத்தில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

தனது காரில் இவர் பாலைவனத்திற்கு சென்ற வேளை வழி தவறி பாலைவனத்தில் மாட்டிக் கொண்டு அங்கு உண்ண ஆகாரமின்மையினால் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய அரபு ராஜ்ஜிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இருந்த போதும் இவரது உயிரிழப்பு தொடர்பில் அபுதாபி பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த இளைஞர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் முறைப்பாடு அளித்து சரியாக ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் தற்போது அவர் சடலமாக இனம் காணப்பட்டுள்ளார் அவரது நல்லடக்கம் அல் அய்னில் உள்ள முத்தாவா பள்ளிவாசலில் இடம் பெற்றுள்ளது.

செய்தி மூலம் - https://www.khaleejtimes.com
தமிழ் - சம்மாந்துறை அன்சார். 




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe