மஜீட்புர கிராமத்தில் பல்வேறு சமூகப் பணிகளை செய்து அனைவரது கவனத்தினையும் ஈர்த்து வரும் மஜீட்புர MESDA இளைஞர் அமைப்பினரால் கிராமத்தை அழகு படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக வீதியோரங்களில் நிழல் தரும் வாகை மரங்கள் நடும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.
இந் நிகழ்வில் MESDA அமைப்பின் தலைவர் ஏ.எம். பிறோஸ், செயலாளர் எம்.ஏ.எம். நஸ்ஸாஜ், பொருளாளர் ஏ.பி.எம். இர்பான் மற்றும் அமைப்பினர் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.