கத்தாரிலுள்ள இந்திய தூதரகம் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுடன் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜுன் - 23ம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுடன் இந்திய கலாச்சார மத்திய நிலையத்தில் அமைந்துள்ள இந்திய தூதரகம் பணிக்கு திருப்பவுள்ளது. கொரோனா தடையின் போது பெரும்பாலான சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டதாகவும் இந்திய கலாச்சார மத்திய நிலையம் (ICC) தெரிவித்துள்ளது. மேலும் இந்தியர்களின் நலன் கருதி விடுமுறை நாட்களிலும் மாலை நேரங்களிலும் ICC பணி புரிந்ததாக தூதரகம் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
44686607
50883026
77534001
தூதரகத்தால் வழங்கப்படவுள்ள சேவைகள் வருமாறு.
1. காலவதியான கடவுச்சீட்டுக்கள், மற்றும் இரண்டு மாதங்களுக்குள் காலவதியாக இருக்கும் கடவுச்சீட்டுக்கள் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான கடவுச்சீட்டுக்கள் மாத்திரம் வழங்கப்படும். ஏனைய சேவைகள் மறுவித்தல் வரை வழங்கப்பட மாட்டாது.
3. புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டுக்களை சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மாலை 4 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் மாத்திரம் பெற்றுக் கொள்ள முடியும். கடவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ள அசல் ரசீது சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
4. Etheraz செயலியில் ஆரோக்கிய குறியீடான பச்சை நிறத்தைக் கொண்டுள்ளவர்கள் மாத்திரம் இந்திய கலாச்சார மத்திய நிலைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
நன்றி - கத்தார் தமிழ்.