Ads Area

சலூன் நிலையம் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார விஷயங்கள் என்னென்ன..?

தற்போதைய கொரேனா அச்ச சூழ்நிலைியல் சலூன் மற்றும் அழகு நிலையக் கடைகளுக்குச் செல்லும்போது என்னென்ன சுகாதார விஷயங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

01. நிச்சயம் சலூன் மற்றும் அழகு நிலையக் கடைக்குச் செல்லும்போது மாஸ்க் எடுத்துச் செல்லுங்கள்.

02. சானிடைஸர் கொண்டு செல்லுங்கள். அடிக்கடி கைகளில் தடவிக்கொள்ளுங்கள். 

03. அங்குள்ள எந்தப் பொருட்களையும் தொடாதீர்கள். வெளியே வந்ததும் சானிடைஸட் தடவிக்கொள்ளுங்கள்.

04. வீட்டிலிருந்தே டவல் எடுத்துச் செல்வது நல்லது. அங்கு போர்த்தப்படும் டவலை தவிர்க்கலாம்.

05. நீங்கள் செல்லும் சலூன் மற்றும் அழகு நிலையக் கடையில் கத்தரிக்கோல், சீப்பு, நாற்காலி என அங்குள்ள பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்து வைத்துள்ளனரா என கவனியுங்கள்.

06. அங்கு பணி புரிவோர் மாஸ்க் மற்றும் கிளவுஸ் அணியவில்லை எனில் அணியச் சொல்லி அறிவுறுத்துங்கள்.

07. அந்த பகுதிகளில் கொரோனா பாதிப்பு பற்றி தெரிந்துகொள்வதும் அவசியம்.


08. முன்கூட்டியே சென்று காத்திருப்பதைக் காட்டிலும் தொலைபேசி எண்ணிற்கு அழைத்து முன் பதிவு செய்துகொண்டு செல்லுங்கள் அல்லது காலியானவுடன் சொல்லச் சொல்லுங்கள்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe