Ads Area

திருமண போட்டோ ஷூட்டை கொரோனா காதல் என போலித் தகவல் பரப்பிய இணையவாசிகள் - (படங்கள் இணைப்பு)

எகிப்தில் கொரோனாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மீது நோயாளி காதல் வயப்பட்டதாக சமீப நாட்களாக செய்தியொன்று இணையத்தில் டிரெண்டாகி வந்தது.

இதுபற்றிய உண்மையை ஆராய்ந்து India Today செய்தி வெளியிட்டுள்ளது. அதில், முஹமது பஹ்மி, அய மொஸ்பா ஆகிய இருவருக்கும் 2018-ம் ஆண்டே நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாகவும், தற்போது நடத்திய திருமண போட்டோ ஷூட் தான் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புகைப்படங்களை எடுத்த புகைப்படக்கலைஞர் முகமது சலீம் அளித்துள்ள விளக்கத்தில், அவர்கள் இருவருமே நலமாக இருக்கிறார்கள். யாருக்கும் கொரோனா இல்லை, இம்மாதிரியான சூழலில் மக்களிடம் நம்பிக்கையை விதைப்பதற்காக இவ்வாறு எடுத்தோம் என தெரிவித்துள்ளார்.

எனவே, திருமண போட்டோ ஷூட்டை கொரோனா காதல் என இணையவாசிகள் தவறாக நினைத்து பதிவிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


புகைப்படங்களின் உண்மைத் தன்மையை அறிய புகைப்படக்கலைஞர் முகமது சலீமின் முகப்புத்தக பக்கத்தினை கிளிக் செய்து பார்வையிடலாம்.

முகப் புத்தகம் - https://www.facebook.com/MohamedSelimPhotography











Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe