சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியா நாளை (21-06-2020) காலை முதல் ஊரடங்கை நாடு தழுவிய ரீதியில் முழுவதுமாகத் தளர்த்த இருப்பதாக தெரிவிக்கின்றது. அவசரத் தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்களை வெளியே செல்ல அனுமதித்திருந்த மக்கா மற்றும் ஜித்தா போன்ற நகரங்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளும் இயல்பு நிலைக்கு திரும்ப இருக்கிறது.
ஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கப்பட்டாலும் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவதற்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அதே போல் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித மக்கா நகரில் உள்ள பள்ளிவாசல்களைத் தவிர அனைத்துப் பள்ளிவாசல்களும் தொழுகைக்காக மீண்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மக்கா நகரில் உள்ள பள்ளிவாசல்களும் திறக்க அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது.