Ads Area

சவுதியில் டாக்சி (TAXI) ரைவர்களாக வேலை செய்வோரின் கவனத்திற்கான முக்கிய தகவல்கள்.

சவூதியில் பேருந்துகள், உள்நாட்டு விமானங்கள், ரயில்கள் மற்றும் டாக்சிகள் உள்ளிட்ட பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதாக போக்குவரத்து பொது ஆணையம் (Transport General Authority) அறிவித்துள்ளது.

புனித மக்கா நகரத்தைத் தவிர சவூதியின் அனைத்து பகுதிகளும் இரண்டாம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த இரண்டாம் கட்டமானது மே 31, 2020 முதல் ஜூன் 20 வரையிலும் நடைமுறையில் இருக்கும் என்பதையும், இந்த காலகட்டத்தில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வீட்டிலிருந்து வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருப்பதையும் முன்னரே பதிவிட்டிருந்தோம்.

இதையடுத்து பாதுகாப்பான மற்றும் சிறந்த போக்குவரத்தை உறுதிசெய்ய டாக்சி மற்றும் வாகனங்களுக்கான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

01. பயணிகளை முன் இருக்கையில் அமர அனுமதிக்கக்கூடாது.

02. ஒவ்வொரு பயணத்திற்கு பிறகும் வாகனத்திலுள்ள கதவின் கைப்பிடிகள் உட்பட, வாகனத்தின் பொதுவான பயன்பாட்டு பாகங்கள் (பயணிகளின் இருக்கை பகுதிகள்) அனைத்தையும் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

03. மருத்துவமனைகளுக்கு பயணிகளை கொண்டு செல்லும் பட்சத்தில் வாகனங்களை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். மேலும் பயணிகள் தும்மல், இருமல் அல்லது வாந்தி போன்ற ஏதேனும் நோய்பரப்பக் கூடிய அறிகுறி கொண்டிருந்தாலும் வாகனங்களை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும்.

04. பயணிகள் இருக்கை பகுதியில் திசு பேப்பர்ஸ்(health papers) மற்றும் கை சுத்திகரிப்பான்களை (hand sanitizers) வைக்க வேண்டும்.

05. டிரைவர் மற்றும் பயணிகள் இருவரும் எல்லா நேரங்களிலும் முக கவசம் அணிய வேண்டும்.

06. பயணம் செய்யும் போது மற்றும் பயணிகள் சென்ற பிறகும் காற்றோட்டத்திற்காக டாக்சி / காரின் ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும்.

07. முடிந்த அளவிற்கு பயணத்திற்கான பணத்தை கிரெடிட் கார்டு மூலமாக செலுத்துங்கள். (for ride-hailing apps)

08. பயணிகள் வாகனத்தில் ஏறும்போது மற்றும் வெளியேறும்போது அவர்களின் தனிப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

09. வாகனத்தில் பயணிகளின் முன் இருக்கை தவிர, மற்ற அனைத்து இருக்கைகளையும் பயணிகள் பயன்படுத்தலாம்.

ஆகவே...சவுதியில் டெக்சி ரைவர்களாக வேலை செய்வோர் சவுதி அரேபிய சட்டதிட்டங்களை கடைப்பிடித்து டெக்ஸி பாவனையில் ஈடுபட வேண்டப்படுகின்றனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe