Ads Area

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த 298 இலங்கையர் நாடு திரும்பினர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமான ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த 298 இலங்கையர்கள் இன்று(09) நாடு திரும்பியுள்ளனர்.

விஷேட விமானம் ஒன்றின் மூலம் குறித்த நபர்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மத்தள விமான நிலையத்திற்கே அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுள் அதிகமானவர்கள் அந்நாட்டுற்கு வேலை செய்வதற்காக சென்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் மத்தள விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

செய்தி மூலம் - https://www.newsradio.lk


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe