இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் 60 வீதமானவை பயன்பாட்டுக்கு உதவாதவை என்று மோட்டார் வாகன திணைக்களம் தெரிவித்துள்ளது.
5வது தேசிய விபத்து தடுப்பு வருட நிறைவை முன்னிட்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையில் 8.1 மில்லியன் வாகனங்கள் வாகன திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் 4.6 மில்லியன் உந்துருளிகள், 1.1 மில்லியன் முச்சக்கர வண்டிகள் அடங்குகின்றன.
இலங்கையின் தற்போது வீதி கொள்ளவு 112 ஆயிரம் கிலோமீற்றர்களாகும் என்றும் மோட்டர் வாகன திணைக்களம் தெரிவித்துள்ளது.
செய்தி மூலம் - http://epaper.dailymirror.lk
தமிழ் - சம்மாந்துறை அன்சார்.
தமிழ் - சம்மாந்துறை அன்சார்.