பேரீச்சம் பழங்களை அதிகளவாக உற்பத்தி செய்யும் நாடுகளில் பட்டியலில் உலகளவில் சவுதி அரேபியா இரண்டாவது இடத்தினைப் பிடித்துள்ளது. சவுதி அரேபியாவில் பேரீச்சம் பழ உற்பத்தியானது மொத்த உலக உற்பத்தியில் 17 சதவீதமாகும். சவுதி அரேபியாவின் 2030 திட்டத்தில் பேரீச்சம் பழ ஏற்றுமதியும் ஒரு முக்கிய அம்சமாக உள்ளதாக சவுதி அரேபியா செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகின் மிகச்சிறந்த பேரீச்சம் பழங்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலிலும் சவுதி அரேபியா முன்னிலை வகித்து வருகின்றது இங்கு 157 பேரீச்சம் பழத் தொழிற்சாலைகள் உள்ளன, அவைகள் உள்ளூர் நுகர்வு மற்றும் ஏற்றுமதிக்காக பல்வேறு தரத்திலான பேரீச்சம் பழங்களை உற்பத்தி செய்கின்றன.
உலகில் பேரீச்சம் பழங்களை அதிகளவு உற்பத்தி செய்யும் நாடுகளில் பட்டியலில் எகிப்து 1வது இடத்தில் இருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://www.saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.