தான் ஓடர் பண்ணிய காப்பியில் தனது பெயருக்குப் பதிலாக ஐஎஸ்ஐஎஸ் என எழுதித் தரப்பட்டமைக்கு எதிராக அமெரிக்கரான ஆயிஷா தனக்கு பாரபட்சம் காட்டப்பட்டதாக வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஆயிஷா, தனது பாதுகாப்புக் கருதி ஒற்றைப் பெயரையே அவர் இந்தச் செய்தியை வெளியிட்ட சீஎன்என் சேவைக்குத் தெரிவித்திருக்கிறார். இந்தப் பெயரையும் அவர் சொல்வதற்குக் காரணம் இருந்திருக்கிறது.
19 வயதான ஹிஜாப் அணிந்த ஆயிஷா, டீ ஒன்று குடிப்பதற்காக மின்னசொடாவில் பிரபல்யமான டார்கட் ஸ்டார்பஸ்ட் பரிஸ்டாவுக்குள் நுழைகிறார். அங்கு தன்னிடம் வந்த சேர்வரிடம் தனக்கான டீயை ஓர்டர் பண்ணுகிறார். அவர் தனது பெயரைக் கேட்ட போது ஆயிஷா என்று சொல்லியிருக்கிறார். டிஸ்போஸபல் கோப்பையில் டீ வரும் போது ஓடர் பண்ணியவரின் பெயர் எழுதப்பட்டுத் தான் வரும். ஆனால் ஆயிஷாவுக்கு டீ வரும் போது அந்தக் கோப்பையில் ஆயிஷாவுக்குப் பதிலாக ஐஎஸ்ஐஎஸ் என எழுதப்பட்டிருந்தது.
அதைக் கண்டதுமே எனது உணர்வுகள் பொங்கி எழும்பின. நான் இழிவுபடுத்தப்பட்டதாக அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். இது உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களின் நற்பெயரைச் சிதைக்கும் சொல். இது போன்றதொன்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இது சரியல்ல எனக் கூறினார் ஆயிஷா. ஜூலை 01 ஆம் திகதி சென்ட் போல்ஸ் தெருவொன்றில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பன்டமிக் காரணமாக ஆயிஷா முகக் கவசம் அணிந்திருந்ததால் அவரது பெயரை உச்சரித்தது ஒழுங்காக காதில் விழாமல் இருந்திருக்குமா ? இல்லை என்கிறார் ஆயிஷா. அவள் எனது பெயரைக் கேட்டபோது நான் பல தடவைகள் உச்சரித்துச் சொன்னேன். அது ஐஎஸ்ஐஎஸ் என்பதாக அவரது காதுக்குக் கேட்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆயிஷா என்பது அறியப்படாத ஒரு பெயரும் அல்ல. நான் பல தடவைகள் எனது பெயரைக் கூறினேன் என்கிறார்.
ஆயிஷா தொடர்புபட்டிருக்கின்ற அமெரிக்க-இஸ்லாமிய உறவுகள் கவுன்ஸிலின் மின்னசொடா பிரிவு (CAIR-MN) இவர்மீதான பாரபட்சத்துக்கு எதிராக மின்னசொடாவின் மனித உரிமைகள் திணைக்களத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இது தொடர்பில் ஆயிஷா பரிஸ்டாவின் சுப்பவைசரிடம் முறையிட்ட போது, “அவர் என்னைப் பொருட்படுத்தவில்லை. எனக்கு வேறொரு டீயும் மேலதிகமாக 25 டொலர் பெறுமதியான ஸ்டார்பக்ஸ் கிப்ட் கார்ட் ஒன்றும் தந்து என்னை பாதுகாப்பு அதிகாரியின் துணையுடன் வெளியேற்றினார்” என ஆயிஷா தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். பெயர்களை உச்சரிக்கும் போது தவறுகள் சிலவேளை நடக்கலாம் என சுப்பர்வைசர் சமாளித்ததாக ஆயிஷா குறிப்பிடுகிறார்.
இது தொடர்பில் ஆயிஷா டார்கெட்டில் முறைப்பாடு செய்த போதும் எந்த எதிர்வினையும் இல்லை என ஆயிஷா குறிப்பிட்டாலும், இந்த விருந்தாளிக்கு ஏற்பட்ட அனுபவத்துக்காக நாம் வருந்துகிறோம். இது வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல, தவறுதலாக நடந்திருக்கலாம். எமது ஊழியரை நாம் மேலும் பயிற்சிக்கு உட்படுத்துகிறோம் என அவர்கள் தெரிவித்ததாக சீஎன்என் தெரிவித்துள்ளது.
கெயார் மின்னசொடாவின் தலைவர் ஜெய்லானி ஹுஸைன், ஒரு முஸ்லிமை ஐஎஸ்ஐஎஸ் எனச் சொல்வது ஒரு முஸ்லிம் மீது எய்தப்படக் கூடிய ஆகப் பெரிய இஸ்லாமோபோபியா கூற்று. டார்கட் போன்ற இடத்திலிருந்து இப்படி வெளிப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இது புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தவறை விட விகாரமானது. ஏனெனில் இஸ்லாமோபோபியாவுக்காக அனைவரும் வருந்துகிறார்களேயன்றி எந்தச் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதில்லை எனக் கூறுகிறார். ஆயிஷாவையும் அழைத்து அவர்கள் மேலுமொரு விசாரணை நடத்த வேண்டும். ஊழியர்களுக்கு அவர்கள் இஸ்லாமோபோபியா பற்றியும் மதவெறி பற்றியும் பயிற்சி நடத்த வேண்டும் என டார்கட்டை அவர் வேண்டிக் கொண்டார்.