Ads Area

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புடைசூழ எழுக இளைஞர் எழுச்சி மாநாடு.

(சர்ஜுன் லாபீர்)

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புடைசூழ எழுக இளைஞர் மாநாடு நேற்று (22) புதன்கிழமை இரவு 7.00 மணிக்கு கல்முனை ஆஸாத் பிளாஸாவில் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புடைசூழ முன்னாள் இராஜாங்க அமைச்சரரும்,தொலைபேசி சின்ன 09ம் இலக்க வேட்பாளருமான எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் அழைத்து வரப்பட்டு இளைஞர்கள் மத்தியில் தற்கால அரசியல் சூழ்நிலை சம்மந்தமாக தெளிவுபடுத்தினார்.

இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொலைபேசி சின்ன 04ம் இலக்க வேட்பாளருமான ஏ.எல்.நஸீர்,கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரகுமத் மன்சூர்,கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம் ரோஸன் அக்தார், வைரகவி எம்.எஸ்.எம் நிசார்(ஜேபி),ஏ.எம் பைறோஸ், ஏ,சி.ஏ சத்தார்,ஏ.ஆர் அமீர்,அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.ரீ.ஆபிதீன், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர் பஸ்மீர்,கட்சியின் பிரதி பொருளாளர் ஏ.சி.யஹியாக்கான்,கட்சியின் முக்கியஸ்தகரும் கல்முனை 12ம் வட்டார அமைப்பாளருமான எம்.எஸ்.எம் பழீல்,இஸ்லாமாபாத் அமைப்பாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான பி.டி.ஜமால்,தேசமாணிய அல்ஹாஜ் ஏ.பி ஜெளபர் உட்பட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe