அம்பாறை – கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை இவ்வாட்சியில் பெற்றுத்தருவதாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பெரிய நீலாவணை பகுதிக்கு தனிப்பட்ட விடயமாக நேற்று (15) இரவு விஜயம் செய்த ஞானசார தேரரை இடைமறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி தருமாறு உண்ணாவிரதம் இருந்தவருமான ச.ராஜன் உப பிரதேச செயலகம் தொடர்பான கடந்தகால வாக்குறுதி என்னவானது என கேள்வி எழுப்பினார்.