Ads Area

சவுதியிலிருந்து எக்சிட் (Final Exit) சென்றவர்கள் புதிய விசாவில் எந்நேரமும் சவுதிக்கு மீண்டும் வரலாம்.

சம்மாந்துறை அன்சார்.

சவுதியிலிருந்து எக்சிட் (Final Exit) சென்றவர்கள் புதிய விசாவில் எந்நேரமும் சவுதிக்கு மீண்டும் வரலாம் அவர்கள் சவுதிக்கு மீண்டும் வருவதற்கு எவ்வித தடையும் இல்லை என சவுதி அரேபியாவின் ஜவசாத் (The General Directorate of Passports) அலுவலகம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவிலிருந்து  எக்சிட் (Final Exit) செல்பவர்களுக்கு சவுதிக்குல் நுழைய 3 வருடங்கள் தடை விதிக்கப்படுவதாக பரப்பப்படும் வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் இதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும் சவுதி அரேபியா ஜவசாத் (The General Directorate of Passports) அலுவலகம் தெரிவித்துள்ளது.


எக்சிட் (Final Exit) செல்வோர்கள் மீது எவ்வித குற்றப் பதிவுகளோ, முறைப்பாடுகளோ இல்லாத பட்சத்தில் அவர்களால் புதிய விசாவில் மீண்டும் சவுதி அரேபியாவிற்கு எந் நேரத்திலும் வர முடியும், இது விடையத்தில் பரப்பப்படும் வதந்திகளில் உண்மையில்லை.

தற்போது சவுதி அரேபியால் கொரோனா காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்துகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe