Ads Area

சவுதி அரேபிய மன்னர் சல்மான் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி.



சவுதி அரேபிய மன்னரும், புனித மக்கா-மதீனா பள்ளிவாசல்களின் பாதுகாவலருமான சல்மான் பின் அப்துல் அஸிஸ் (Salman bin Abdulaziz) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  பித்தப்பையில் ஏற்ட்ட அழற்சியின் காரணமாகவே அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கிங் பைசல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்னர் சல்மான் அவர்களின் உடல்நிலை சீராக வேண்டிய சவுதி அரேபியாவில் பல இடங்களில் பிரார்த்தனைப் பதாகைகள் வைக்கப்பட்டும் உள்ளன.

செய்தி மூலம் - https://www.saudigazette.com.sa
தமிழ் - சம்மாந்துறை அன்சார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe