Ads Area

சவுதியில் சர்வதேச விமானப் பயணங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளிவந்த தகவல்.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவுகள் அமுலாக்கப்பட்டு கடந்த மே மாத காலப்பகுதியில் அனைத்துத் தடைகளும் நீக்கப்பட்டு சவுதி அரேபியா வழமைக்குத் திரும்பியது இருந்த போதும் சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் உம்ராப் பயணத் தடை நீக்கப்படவில்லை அவை தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.

போலிச் செய்தியை நம்பி விடாதீர்கள்.

இந் நிலையில் சமூக வலைத்தளங்களில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடைகள் நீக்கப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி முதல் விமானங்கள் செயற்படவுள்ளதாகவும், இதன் முதற்கட்டமாக கொரோனா காலப்பகுதியில் சவுதியிலிருந்து விடுமுறை போன்ற காரணங்களுக்காக ஏனைய நாடுகளுக்குச் சென்ற குடியிருப்பாளர்களை மீண்டும் அழைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதே போல் சவுதியிலிருந்து தங்களது சொந்த நாடுகளுக்குச் செல்ல ஆயத்தமாகி கொரோனாவினால் செல்ல முடியாமல் சவுதியில் தங்கியுள்ளவர்களை அவர்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், செம்டம்பர் 16ம் திகதி முதல் சவுதி அரேபியாவுக்குல் செல்லுபடியான விசாக்கள் மூலமாக எவரும் வர முடியும் எனவும், ஒக்டோபர் 01ம் திகதி முதல் விமானக் கட்டுப்பாடுகள் பூரணமாக நீக்கப்பட்டு சர்வதேச விமானப்பணங்களின் உள்வருகை, வெளிச் செல்கை என சகலதும் வழமைபோன்று இயங்கும் எனவும் சவுதி அரேபிய சிவில் விமான போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளதாக, ஒரு போலிச் செய்தி ஒன்று உலா வந்து கொண்டிருக்கின்றது.


இவ்வாறான செய்தியில் எவ்வித உண்மையுமில்லை என்றும், இதுவரை சர்வதேச விமானப் பயணங்களை மீள ஆரம்பிக்கும் திகதி நிர்ணயிக்கப்படவில்லை என்றும் சவுதி அரேபிய சிவில் விமான போக்குவரத்து ஆணையகம் தங்களது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தற்போது சவுதி அரேபியாவில் உள்நாட்டு விமான சேவைகள் மாத்திரமே மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதே தவிர சர்வதேச விமானப் பயணங்கள் இன்னும் மீள ஆரம்பிக்கப்படவில்லை. ஆகவே மேற்குறித்த போலிச் செய்தியை நம்பி யாரும் விமான டிக்கெட் முன்பதிவுகள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள்.

செய்தி மூலம் - https://www.saudigazette.com.sa






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe