அமெரிக்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர், நடு வீதியில் நிர்வாணமான நிலையில் பலவித யோகாசனங்களை செய்து பொலிஸாரை தன்னை நெருங்கவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார். ஓரிகன் மாநிலத்தின் போர்ட்லேண்ட் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றது.
மினசோட்டா மாநிலத்தின் மினேபொலிஸ் நகரில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளொயிட் வெள்ளையின பொலிஸ் அதிகாரியினால் முழங்காலால் மிதித்து கொல்லப்பட்டதையடுத்து, பொலிஸாருக்கு எதிரான கடந்த 50 நாட்களாக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
ஒரிகன் மாநிலத்தின் போர்ட்லன்ட் நகரிலும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் நிலையில், பெண்ணொருவர் நிர்வாணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
நினைவுச் சின்னங்களை பாதுகாக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதையடுத்து, போர்ட்லன்ட் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி ஆர்ப்பாட்டத்தின்போது, வீதியில், பொலிஸார் வரிசையில் நின்றுகொண்டிருந்த நிலையில், முகக்கவசத்தையும் தொப்பியொன்;றையும் மாத்திரம் அணிந்தவாறு நிர்வாணமாக காணப்பட்ட குறித்த பெண், யோகாசன மற்றும், பாலே நடனப் போஸ்களை கொடுத்தார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், பொலிஸார் அப்பெண்ணில் கால்களை நோக்கி மிளகு பந்துகளை வீசியபோது, அப்பெண்ணை அங்கிருந்த ஆர்ப்பாட்டகாரர் ஒருவர்; காப்பாற்றினார் எனத் தெரிவித்துள்ளார்.
சுமார் 10 நிமிடங்களாக இந்த நிர்வாணப் பெண்ணின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்த நிலையில், பொலிஸார் அங்கிருந்து வெளியேறினர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
மேற்படி பெண்ணை 'நிர்வான அதீனா' என சமூக ஊடங்களில் பலர் வர்ணித்துள்ளனர். அதீனா என்பது கிரேக்க புரானங்களின்படி யுத்த தேவதை என்பது குறிப்பிடத்தக்கது.