பொது பூங்காக்கள் துறையால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் பல்வேறு பூங்காக்களில் பறவைகள் நீர் அருந்துவதற்காக தண்ணீர் தொட்டிகளை அமைத்துள்ளது.
கத்தாரில் வெப்பநிலை அதிக அளவில் உள்ள நிலையில், பறவைகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்கும், கோடை காலத்தில் அவை உயிர்வாழ உதவுவதற்கும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நீர் தொட்டிகள் அவ்வப்போது சுத்தம் செய்யப்படும் என்றும், அவற்றில் சுத்தமான நீர் வழங்க உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.