Ads Area

கத்தாரில் சுமார் 65 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இந்தியர் ஒருவர் மரணம்.

கத்தாரில் சுமார் 65 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இந்தியர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கத்தார் நாட்டின் ஆரம்பகால வெளிநாட்டவர்களில் ஒருவரான கரண்டோத் மூஸா ஹாஜி என்பவர் 65 ஆண்டுகளுக்கு மேலாக கத்தாரில் வாழ்ந்து வந்தவராவார்.

இவர் தோஹாவில் உள்ள அல் ஸர்கா (Al Zarka Restaurant) உணவகத்தின் உரிமையாளராகவும் மற்றும் நீலிமா ஹோட்டலின் (Neelima Hotel) உரிமையாளராகவும் இருந்தவர். இவர் தன்னுடைய 18வது வயதில் இந்தியாவில் இருந்து கத்தாருக்கு வந்துள்ளார்.

இவர், கத்தார் வந்த அந்த காலகட்டத்தில், கத்தார் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. இவர் கத்தாரில் இருந்த ஆரம்ப காலத்தில் கத்தாரில் உள்ள தோஹா நகரம் சரியான தண்ணீர், மின்சாரம் இல்லாத ஒரு சிறிய சந்தை நகரமாக இருந்தது.

தகவல் - தமிழ் மைக் செட்


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe