கிழக்கிலங்கையில் முதன்முறையாக சம்மாந்துறையை சேர்ந்த வைத்தியர் ஏ.ஐ.ஏ.சியாட் (MBBS), Health Informatics துறையில் MD படிப்பை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார்.
இவர் இதற்கு முன்னர் தகவல் தொழில் நுட்பம் (IT) , பொது சுகாதாரம் (Public Heath), மரபியல் (Genetics) ஆகியவை அடங்கிய Biomedical Informatics துறையில் MSc படிப்பை நிறைவு செய்து இருந்தார்.
Biomedical Informatics (2010) மற்றும் Health Informatics (2016) துறைகளானது கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவகத்தினால் (PGIM) 2010 முதல் நடாத்தப்பட்டு வருகிறது.
இத்துறையானது நவீன மருத்துவத்தில் தகவல் தொழில் நுட்பம், மூலக்கூற்று உயிரியல், மற்றும் ஆய்வுகளை உள்ளடக்கிய துறையாகும்.
அதேபோல் இந்த Health Informatics துறை சார்ந்த வைத்தியர்களால் உருவாக்கப்பட்ட COVID-19 Surveillance System கோரோனா தொற்று நோயாளர்களின் பரவலை (Contact Tracing) உதவி வருகிறது.
இந்த மென்பொருளானது DHIS2 எனும் Open Source Platform இல் உருவாக்கப்பட்டிருப்பதோடு இதனை WHO வே 3ஆம் உலக நடுகளுக்கு COVID-19 தொடர்பாக தகவல் திரட்ட பரிந்துரை செய்துள்ளது.
வைத்தியர் சியாட் அவர்கள் MD சித்தி அடைந்ததன் மூலம் Senior Registrar எனும் நிலையை அடைந்துள்ளார். மேலும் ஒரு வருட பயிற்சியின் பின்னர் வெளிநாடு சென்று ஒரு வருட கற்கை நெறியை பூர்த்தி செய்தபின் எமது பிராந்தியத்துக்கு Health Informatics துறையில் ஒரு Consultant ஆக சேவை செய்ய வாழ்த்துகிறோம்.