பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சனுக்கும், அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
77 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதுடன், “எனது குடும்பத்தார் மற்றும் எனது பணியாளர்களுக்கு கொரோனா தொற்றுக்கான சோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சோதனை முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.
சிறிது நேரத்தில் அவருடைய மகனும், பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.