Ads Area

உலகில் குற்றங்கள் குறைந்த பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் கத்தார்.

உலகின் குற்றங்கள் குறைந்த பாதுகாப்பான நாடுகளின் 2020ம் ஆண்டுக்கான பட்டியலில் கத்தார் முதல் இடத்தைப் பெற்று பாதுகாப்பான நாடாக பெயரிடப்பட்டுள்ளது

129 நாடுகளுக்கு மத்தியில் பாதுகாப்புள்ள நாடாக கத்தார் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளின் மிகப்பெரிய தரவுத்தளமான Numbeo என்ற நிறுவனத்தினால் வெளியிட்டுள்ள சமீபத்திய வருடாந்த அறிக்கையின்படி, உலக நாடுகளில் பாதுகாப்பான நாடு, உலகளாவிய ரீதியில் பாதுகாப்பு மற்றும் அரபு தேசத்தில் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கத்தார் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.


இரண்டாவது இடத்தில் தாய்வானும், மூன்றாவது இடத்தில் ஐக்கிய அரபு இராச்சியமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழு விபரங்களை இங்கு தரப்பட்டுள்ள இணைப்பிற்கு சென்று பார்வையிட முடியும் https://www.numbeo.com/crime

கத்தார் தமிழ்
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe