கொரோனாவுக்கு முன்னர் விடுமுறை போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு வெளியில் சென்றவர்கள் குறிப்பாக இந்தியா சென்ற இந்தியர்கள் இன்றிலிருந்து (2020-07-12) மீண்டும் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் (UAE) திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்வாறு மீள் திரும்ப அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், முதல் விமானம் புதுடெல்லியிலிருந்து ஏயர் இந்தியா விமானம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஷார்ஜாவில் தரையிறங்கும் என்றும் அதே பொல் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய இரு விமானங்கள் ஷார்ஜா, துபாய் மற்றும் அபுதாபியில் தரையிறங்கும் என்றும் ஸ்பைஸ் ஜெட் ராஸ் அல் கைமாவுக்கு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் புது தில்லி, மும்பை, கோழிக்கோடு மற்றும் கொச்சியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராஸ் அல் கைமாவுக்கு இன்று முதல் எதிர்வரும் 26ம் திகதி வரை இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 19 முதல் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பும் முதல் விமானங்கள் இவைகள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://gulfnews.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.