கொரோனா பாதிப்பினால் விதிக்கப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து தடையின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் தாய் நாட்டிற்கு திரும்ப முடியாமலும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் விடுமுறை மற்றும் இன்ன பிற காரணங்களால் இந்தியாவிற்கு வந்து மீண்டும் தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கு செல்ல முடியாமலும் தவித்து வந்த வேளையில், இந்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் திட்டம் தொடங்கப்பட்டு தற்பொழுது வரையிலும் இலட்சக்கணக்கான இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
அமீரக வாழ் இந்தியர்கள் பலரும் இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு வருவதற்கு பல நாட்கள் காத்துக்கிடந்ததன் பலனாக, தற்பொழுது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஜூலை 12 முதல் 26 வரை இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இதற்கு முன்னராக, சுகாதார ஊழியர்கள், மருத்துவம் மற்றும் பிற அவசர நிலை காரணமாக அமீரகம் வர வேண்டியவர்கள் என மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே இந்தியர்கள், தூதரகத்தின் உதவியுடன் அமீரகம் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திக்கு மிக்க நன்றி - www.khaleejtamil.com