நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸீம்
தேசிய காங்கிரசின் சார்பில் கடந்த மாகாணசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்று கிழக்கு மாகாணசபை உறுப்பினராக இருந்துவந்த தொழிநுட்ப உதவியாளர் ஏ.அமீர் அவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரசில் சில வருடங்களுக்கு முன்னர் இணைந்து கொண்டிருந்தார். அக்கட்சியில் தமக்கு எவ்வித கௌரவங்களும் அழிக்கப்படவில்லை எனும் கருத்தை முன்வைத்து நேற்று நண்பகல் தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் முன்னிலையில் மீண்டும் தேசிய காங்கிரசின் கொள்கைகளில் உண்மை இருக்கிறது என்று கூறி இணைந்து கொண்டார்.
தேசிய காங்கிரசில் மீள் இணையும் நிகழ்வில் தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.