Ads Area

வயிற்றில் உள்ளது பெண் குழந்தை என்பதால் மனைவியை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த கணவன்.

வயிற்றில் உள்ளது பெண் குழந்தை என்பதால் மனைவியை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த கொடூர கணவன்.

ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் பெற்ற மனைவி, நான்காவதாக வயிற்றில் உள்ள குழந்தையும் பெண் குழந்தை என்பதை அறிந்து ஆத்திரமடைந்த கணவர், 8 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவியை அடித்து தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த சம்பவம் செங்கம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மணிகண்டன் என்ற ஆட்டோ டிரைவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஷோபனா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இது ஒரு காதல் திருமணம் என்பதும் இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக ஷோபனா மீண்டும் கர்ப்பமானார். அவர் 8 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது சட்டத்துக்குப் புறம்பாக ஸ்கேன் எடுத்து வயிற்றில் உள்ளது மீண்டும் பெண் குழந்தை என்பதை மணிகண்டன் கண்டுபிடித்துள்ளார். இதனை அடுத்து ஒரு ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்க முடியவில்லையா? என ஷோபனாவை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.


இந்த நிலையில் திடீரென வயிற்று வலியால் ஷோபனா இறந்து விட்டதாக அவரது பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சோபனாவின் பெற்றோர்கள் மருத்துவமனையில் ஷோபனாவின் பிணத்தை பார்த்தபோது அவரது கழுத்தில் கயிறு இறுக்கிய தடம் இருந்தது. இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில் போலீசார் மணிகண்டனை விசாரித்து வருகின்றனர். விசாரணையில் அவர் நான்காவதும் பெண் குழந்தை என்பதால் ஷோபனாவை அடித்து துன்புறுத்தி தூக்கில் தொங்க விட்டதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe