Ads Area

கடந்த இரு வாரங்களில் சவுதியில் 8 இலங்கையர்கள் கொரோனாவினால் மரணம்.

கடந்த இரண்டு வாரங்களில் சவுதி அரேபியாவில் 8 இலங்கையர்கள் கொரோனாவினால் மரணமடைந்திருப்பதாக சவுதி அரேபியா றியாத்தில் உள்ள இலங்கைத் துாதரகம் தெரிவித்துள்ளது.

மரணமடைந்த 8 பேரில் 3 பேர் மாத்திரம் றியாதில் மரணமடைந்துள்ளதாகவும் ஏனைய 5 பேரும் சவுதியில் உள்ள ஏனைய பிராந்தியங்களில் மரணமடைந்திருப்பதாகவும் றியாத்தில் உள்ள இலங்கைத் துாதரகம் கொழும்பு டைம்ஸ் செய்திக்கு தகவல் தெரிவித்துள்ளது.


நம்பகமான ஆதாரங்களின்படி, றியாத் நகரத்தில் மரணமடைந்தவர்களில் இலங்கையில் குருநாகலை பிரதேசத்தைச்  சேர்ந்த நீல் ராஜரத்னே 52, கொழும்பைச் சேர்ந்த பைரோஸ் சுல்பிகர் பாரூக் மற்றும் 27 வயதான முகமது ரேஷ்மி ஆகியோர் அடங்குவதாகவும், அவர்களின் உடல்கள் றியாத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இறுதிக்கிரியையின் போது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி மூலம் - http://colombotimes.net
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe