(எஸ் ஜே புஹாது )
அக்கரைப்பற்றில் இருந்து கல்முனை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த கனரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் இஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்
இச்சம்பவம் இன்று மாலை 6.45 மணியளவில் சம்மாந்துறை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு பிரதான வீதியில் காரைதீவு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது
இந்த விபத்தின் போது மரணமடைந்தவர் நிந்தவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது
இஸ்தலத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலீஸார் இது தொடர்பான விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.
Thanks - asiannews