Ads Area

காரைதீவில் தனது இறந்த மகளின் நினைவாக பொதுமகன் ஒருவரால் கட்டப்பட்ட பஸ்தரிப்பிடத்தில் போஸ்டர்கள்.

காரைதீவுப் பிரதேசத்தில் பொதுமகன் ஒருவரினால் தனது இறந்த மகளின் ஆத்மாவின் நினைவாக மக்களின் பாவனைக்காக கட்டப்பட்டு காரைதீவு பிரதேச சபையிடம் ஒப்படைக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையத்தில் தேர்தல் பிரச்சார போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

மிகவும் நேர்த்தியான முறையில் கட்டப்பட்டு வெள்ளை வர்ணம் பூசப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக பயண்படுத்தப்படும் வகையில் உள்ள குறித்த பஸ் தரிப்பு நிலையத்தில் இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு தேர்தல் விதிகளும் மீறப்பட்டுள்ளதாகவும், குறித்த பஸ் தரிப்பிடம் அலங்கோலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் பிரச்சார போஸ்டர்கள், பதாதைகள் போன்றவற்றை பொதுச் சொத்துக்கள் மீது ஒட்டி அதனை அசுத்தப்படுத்வோர் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe