கொரோனாவால் ஏற்பட்ட நன்மைகளில் ஒன்று பெரும்பாலான தாய்மார்கள் கர்ப்பமாக உள்ளதாக குறிப்பாக குழந்தை இல்லாமல் இருந்த பல தாய்மார்கள் இந்த ஊரடங்கு விடுமுறையில் தாய்மை அடைந்து உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
கணவன் மனைவி ஆகிய இருவரும் வேலைக்குச் செல்லும் போது இருவரும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதனால் தாம்பத்யம் இருந்தும் திருப்தி இல்லாமல் இருந்ததாகவும், அதனால் பலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது என்றும் மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு எவ்வளவோ மருத்துவ சிகிச்சை செய்தும் பயன் இல்லாமல் இருந்தது.
ஊரடங்கு உத்தரவால் வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் தம்பதியர்களுக்கு பொருளாதார கஷ்டம் இருந்தாலும் மனதளவில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றும் தாம்பத்தியம் முழு அளவில் திருப்தியோடு நடந்துள்ளதாகவும் இதுவே பல தாய்மார்கள் தாய்மை அடைந்து இருப்பதற்கு காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.