Ads Area

நடு ரோட்டில் மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் ஓடிய கணவன்! கண்கலங்க வைத்த சம்பவம்.

தமிழ் நாடு திருப்பதி காவல்நிலையம் வாசலில் மனைவி மற்றும் குழந்தையை தவிக்கவிட்டு, கணவன் காதலியுடன் இரு சக்கர வாகனத்தில் விட்டால் போதும் என்று ஓடிய சம்பவத்தின் வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆந்திரப்பிரதேசத்தின், திருப்பதி கிழக்கு காவல் நிலையத்திற்கு சரஸ்வதி என்பவர், தன்னுடைய 8 வயது மகளுடன் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில், தன்னுடைய கணவர் வெங்கடாஜலபதி வேறொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த பெண்ணிடம் இருந்து கணவரை மீட்டுத் தரும்படியும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து விசாரணைக்காக வெங்கடாஜலபதி, தன்னுடைய காதலியுடன் காவல்நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் தான் காதலியுடன் செல்ல விரும்புவதாக கூறியதால், வெங்கடஜலாபதியின் காதலி மற்றும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அங்குள்ள பொலிசார் வழக்கை விசாரிக்க மறுத்து, மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், சரஸ்வதி, எப்படியாவது தனது கணவன் தன்னுடன் வந்து விட மாட்டாரா? என்று அவரிடம் கெஞ்சினார். அவர் மட்டுமின்றி உடன் இருந்த 8 வயது மகளும் அப்பா...அப்பா என்று கதறினார்.

ஆனால் அவரோ, தன்னுடைய காதலியுடன் இரு சக்கர வாகனத்தில் விட்டால் போதும் என்ற புறப்படுவதற்கே தயாராக இருந்தார். இருப்பினும் சரஸ்வதி, கணவனின் இரு சக்கர வாகனத்தை மறிக்க, உறவினர்கள் பிரச்சனை வேண்டாம் என்று அமைதிப்படுத்திய நேரத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில், காதலியுடன் அங்கிருந்து வேகமாக வெங்கடாஜலபதி தப்பினார்.

இதனால், சரஸ்வதி அந்த இரு சக்கர வாகனத்தின் பின்னாலேயே ஓடிச்சென்று அவ மீது செல்போனை வீசி எறிந்து உரக்கக் கத்தி நடு ரோட்டில் கதறி அழுதார். தாய் அழுவதைப் பார்த்த அந்த சிறுமி, ஆவேசமாக தந்தையின் செல்போனை முதலில் நீக்கு, அவர் வேண்டாம் என்பது போல் சொன்னார்.இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வர, இணையவாசிகள் பலரும் வெங்கடாஜலபதியை மிகவும் மோசமாக திட்டி வருகின்றனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe