Ads Area

17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை.

தமிழ்நாடு பெரம்பலூரில் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொம்மனப்பாடி கிராமத்தைச் சேர்ந்த குமார் என்ற 23 வயது இளைஞர், 17 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் உறவும் வைத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல்துறைக்குப் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் குமாரை கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி மலர்விழி, குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, பெரம்பலூர் கிளைச் சிறையில் குமார் அடைக்கப்பட்டார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe