இலங்கையில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒரு குழந்தை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகிறது என்றும், ஒவ்வொரு நாளும் குறைந்தது 4 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றும், குற்றம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிஜந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த புள்ளிவிபரம் அமைகிறது. மாறாக, முறைப்பாடுகள் தர தயங்குகிற போக்கும் காணப்படுகிறது.
செய்தி - https://english.newstube.lk