Ads Area

எதிர்வரும் நாட்களில் கோழி முட்டையின் விலையில் மாற்றம் ஏற்படலாம்.

எதிர்வரும் நாட்களில் கோழி முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளளது. கோழி தீவனத்திற்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் சுபசிங்க தெரிவித்துள்ளார்.

கோழி தீவனத்திற்கு சோளத்தின் அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்காக அரசாங்கத்தின் மாற்று உணவாக கோதுமை விதைகள் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மெட்ரிக் டன் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும் கோதுமை விதைகள் கோழித் தீவனத்திற்கு மாற்ற வழியல்ல. இதுவரையில் வேறு உணவு வகைகளை வழங்குவதனால் பாரிய நட்டத்தை ஏற்க நேரிட்டுள்ளது.

நட்டமின்றி கோழி முட்டையை விற்பனை செய்ய வேண்டுமாயின் அதன் விலையை 20 ரூபா வரையில் அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கோழி தீவனத்தின் பற்றாக்குறை காரணமாக கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe