Ads Area

தமிழ் முஸ்லிம்களை பிரித்து மக்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.

பாறுக் ஷிஹான்

தமிழ்  முஸ்லிம்களை பிரித்து  மக்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்  என  முஸ்லிம் உலமாக் கட்சியின் தலைவர் முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தல்  நிலைப்பாடு தொடர்பாக முஸ்லிம் உலமாக் கட்சியின் தலைவரது அலுவலகத்தில் இடம்பெற்ற   ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (2) மதியம்   நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

எதிர்வரும்   தேர்தலில் முஸ்லிம் மக்கள் குறிப்பாக கிழக்கு முஸ்லிம் மக்கள் சிறந்த தவைரை தெரிவு செய்ய முன்வர வேண்டும்.   தலைவர்கள் எமது மக்களை    அடிமைகளாக வைத்திருப்பது  செயற்படுவது  போன்றவை தவிர்க்கப்பட்டு புதியவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலங்களிலே பெரும் ஆபத்துக்களை இந்த முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியது. குறிப்பாக  முஸ்லிம் மக்கள் அதில்  பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய  சூழ்நிலையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தாங்கள் பொருப்பல்ல என்றும் அனைத்திற்கும் ஜனாதிபதி  பொறுப்புக்கூற வேண்டும் என நழுவுகின்ற போக்கினை முஸ்லீம் பெயர் தாங்கும் கட்சியினர் கூறி வருகின்றனர்.

மேலும்    கல்முனை பிரச்சினைக்கு   தீர்வை பெற்றுத் தரக்கூடியவர்கள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தை அலங்கரிக்க வேண்டும்.எனவே    இந்த கல்முனை பிரச்சினையை பிச்சைக்காரனது புண் போன்று அதைக் காட்டியே அரசியல் செய்கின்றவரை மக்கள் நிராகரிக வேண்டும்.கல்முனை முஸ்லிம் மக்கள் சகோதர தமிழ் மக்களுடன் ஒன்றாக வாழ வேண்டும் என கூறினார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe