பழைய இரும்புக்காக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இரட்டை தட்டு பேரூந்து - பாடசாலைக்கான நூலகம் ஆனது!
மாணவி ஒருவரின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் மெதிரிகிரிய சிறிமாவோ பண்டாரநாயக்க ஆரம்ப பாடசாலைக்கு நூலகம் ஒன்றை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
கடந்த ஜூலை மாதம் 05ஆம் திகதி மெதிரிகிரியவிற்கு நான் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது பாடசாலையில் தரம் 3இல் கல்விகற்கும் வினுரி தஹம்ஷா என்ற மாணவி பாடசாலைக்கு நூலகம் ஒன்றைப் பெற்றுத் தருமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு அமைய இலங்கைப் போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க அவர்களின் ஏற்பாட்டின் மூலம் மஹரகம டிப்போவில் இரும்புக்காக ஏல விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இரட்டை தட்டு கொண்ட பேரூந்து ஒன்றை சபையின் ஊழியர்கள் நடமாடும் நூலகம் ஒன்றுக்கு பொருத்தமான வகையில் நவீனமயப்படுத்தினர்.
நூலகத்திற்கு அவசியமான புத்தகங்களை வழங்குவதற்கு தெரன ஊடக வலையமைப்பின் தலைவர் திலித் ஜயவீர மற்றும் மஹரகம டிப்போ ஊழியர்கள் அனுசரணை வழங்கினர்.