நிந்தவூர் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து ! சம்மாந்துறை இளைஞன் மரணம்
நிந்தவூர் பிரதான வீதியில் இன்று 7.25 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்மாந்துறை சேர்ந்த இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இவரது 14 வயதான இவரது சகோதரி நிந்தவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரணமடைந்த இளைஞன் சம்மாந்துறை விளினையடியை சேர்ந்த 18 வயதுடைய நாசிக் என்பவராகும். இச்சம்பவம் இன்று 2020.08.03 மாலை 7.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.