எல்லோரும் சேர்ந்து எங்களை சாவடிக்கின்றார்கள் 6 மாதமாகிட்டது வேளையும் இல்லை சம்பளவும் இல்லை சாப்பாட்டுக்கு கஸ்ட்டப்படுகிறோம் எத்தனையோ முறைப்பாடு செய்திருக்கின்றோம் யாருமே கண்டுகொள்வதில்லை நீங்கள் கூறுவது போல 5000/ 4000/ அதி கூடிய பணம் எங்களைப்போல கஷ்டப்படுபவர் யாரிடமும் பணம் இல்லை! அல்லாஹ்வையும் உங்களையும் நம்பித்தான் இருக்கின்றோம் எப்படியாச்சிம் நாட்டுக்கு அனுப்பிவையுங்கள்! ஒவ்வொரு மாதம் முடியும் போது தலைவலி மனநோய் பல நோய்கள் வரப்போகுதோ என்ற என்னம் தோன்றுகின்றது. இப்படி பலபேர் குழம்புகின்றனர் !!!!!
வாருங்கள் கேட்போம் அவர்களின் சோக கதையை !!!!!!!' COVID19 MAFIA
Corona வை வைத்து Chartered flights மூலம் உழைக்கும் ஒரு கூட்டம் ! எவ்வளவு தொகை கொடுத்தாவது நாடு செல்ல வேண்டும் என்பதற்காக சில கூட்டம் அலை மோது கின்றனர் ! இவர்களிடம் காசு இல்லாவிட்டாலும் எப்படியாவது நாடு திடும்ப வேண்டும் என்ற எண்ணம் ! காரணம் வேலை இன்மை' தங்க இடமில்லை' உணவு திண்டாட்டம்' இது போன்ற கரணங்கள் அடங்கியுள்ளன!
இதனை ரத்து செய்யும் பட்சதில் விமான நிலையங்களை திறக்கவேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்படும்.
இலங்கையை விட மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் விமான சேவைகளை ஆரம்பித்திருக்கும்போது இலங்கை மாத்திரம் இந்த மாபியாக்களுக்கு கொள்ளையடிக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.
சவூதியில் மாத்திரம் 11,000 பேர் (றியாத், தமாம் மற்றும் ஜித்தா) பதிவுசெய்து காத்திருப்பதாக அறியக்கிடைக்கிறது.
வசதி படைத்தவர்கள், நல்ல பதவிகளில் இருப்பவர்கள் இந்த மாபியாக்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளில் ஆயிரக்கணக்கான அப்பாவி ஏழை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சவுதியிலிருந்து இலங்கை செல்ல விமானக் கட்டணம் 4450 ரியால் ; ஏழைத் தொழிலாளிகள் நிலை என்ன?
தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் நிமித்தமாக வருகை தந்துள்ள லட்சக்கணக்கான பணியாளர்கள் தமது தாயகம் நோக்கி பயணம் செய்யும் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தார்கள்.
கொரோனா நோய் தொற்று காரணமாக அதிகமான பணியாளர்கள் தமது வேலை வாய்ப்பை இழந்தது மட்டுமல்லாமல் மாதச் சம்பளம் இன்றியும், தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள பணமில்லாத சூழ்நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறார்கள்.
வெளிநாட்டு பணியாளர்கள் நாடு திரும்புவதற்கு பெருவாரியான பணத்தை செலவழிக்க வேண்டியுள்ளது. இதனைத் தட்டிக் கேட்பதற்கும் இவர்கள் சார்பாக ஒரு முறைப்பாட்டை அரசாங்கத்திற்கு எடுத்து வைக்கவும் முடியாத சூழ்நிலையிலேயே இவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்
இச்சந்தர்ப்பத்தில் சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, இலங்கைக்கு மீண்டும் திரும்பிச் செல்வதற்கு உத்தேசித்துள்ள பணியாளர்கள் 4450SAR (சவுதி அரேபியாவில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் கட்டணம் தவிர்த்து) சிறீ லங்கன் எயார் லைன்ஸுக்கு செலுத்துமாறு வேண்டியுள்ளது. செலுத்தும் தொகையில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
01. ஒருவழிப் பயண விமான டிக்கெட்
02. 3 ஸ்டார் ஹோட்டல்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்
03. PCR(2) பரிசோதனை
04. விமான நிலையத்திலிருந்து தங்குமிட ஹோட்டல் வரை போக்குவரத்து வசதி
மிகக்குறைந்த சம்பளத்தில் வேலை செய்த வெளிநாட்டு பணியாளர்களால் இத்தொகையை செலுத்த முடியுமா என்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் இவர்கள் தமது நாட்டை நோக்கி பயணிக்க அரசாங்கம் சலுகைகளையும் உதவிகளையும் செய்யுமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இலங்கையில் வாழும் நல்ல உள்ளம் கொண்ட சகோதர சகோதரிகள் மற்றும் பெரியார்கள் தயவு செய்து இதனை share பண்ணவும்.
எழுத்து - omerdeen

