(நூருல் ஹுதா உமர்)
ஐக்கிய மக்கள் சக்தியினால் சிறுபான்மை கட்சிகளுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக வழங்கப்பட வேண்டிய தேசிய பட்டியல் விவகார சிக்க நிலை இப்போது உச்சம் தொட்டு இருக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (5+1 ஆசனங்கள்), தமிழர் முற்போக்கு கூட்டணி (6 ஆசனங்கள்), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (3 ஆசனங்கள்) ஆகிய சிறுபான்மை கட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய தேசிய பட்டியல் ஆசனத்தை ஐக்கிய மக்கள் சக்தியினால் பங்கிட்டு வழங்குவதில் பாரிய இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் காரியாலயத்தில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசாவுடன் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அப்பேச்சுவார்த்தை இழுபறியில் முடிவுற்றிருந்ததுடன் இதுசம்பந்தமாக மேலதிக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.