(எம்.என்.எம்.அப்ராஸ்)
நாடாளுமன்ற பொது தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றதையடுத்து பிரதமராக மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவி பிரமாணம் செய்ததையடுத்து அக்கரைப்பற்று நகரில் மகிழ்ச்சி கொண்டாட்டம் இன்று(09) இடம்பெற்றது அம்பாறை மாவட்ட அனைத்து கட்சிகள் ஒன்றியத்தின் தலைவர் எம் .எம் .நிஸாம் முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது ஆதரவாளர்களால் பானங்கள் பேரீத்தம் பழங்கள் என்பன வீதியினால் பயணித்த பயணிகள் ,பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் பிரதமராக மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்றதைமுன்னிட்டு அம்பாரை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் வீதிகளில் பால்சோறு, பானம் என்பன ஆதரவாளர்களால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.