கத்தார் நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு (MADLSA) கத்தாரில் பணிபுரியம் பணியாளர்களுக்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. கத்தார் அதிபர் தமீம் பின் ஹமத் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் குறைந்த பட்ட அடிப்படைச் சம்பளம், மற்றும் பணியாளர்கள் தங்களது தொழில்களை மாற்றிக் கொள்வதற்கான NOC தேவையில்லை (ஒப்பந்தகாலம் முடிந்த பின்னர்) என்பவை முக்கிய விடயங்களாகும்.
கத்தாரின் 2020ம் ஆண்டு 17 இலக்க சட்டத்தின் மூலம் அனைத்து பணியாளர்களும் குறைந்த பட்ச அடிப்படைச் சம்பளமாக 1000 றியால்கள் மாதம் ஒன்றுக்கு வழங்கப்படவேண்டும். அத்துடன் உணவு, தங்குமிடம் போன்றவை ஒப்பந்தக்காரர்களால் வழங்கப்படவேண்டும். அவ்வாறு வழக்கப்படாதவிடத்து, தங்குமிடத்துக்காக 500 றியால்களும், உணவுக்காக 300 றியால்களும் மாதம் ஒன்றுக்கு வழங்கப்படவேண்டும். இதன்படி குறைந்த பட்சம் மாதம் ஒன்று 1800 றியால்கள் கட்டாயம் வழங்கப்படவேண்டும் என்பதாக தெளிவு படுத்துப்பட்டுள்ளது
கத்தார் நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சானது கத்தாரிலுள்ள நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் ஒப்பந்தங்களை 6 மாதங்களுக்குள் இற்றைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற தொழிலாளர் நல சட்டங்களை மத்திய கிழக்கில் கத்தாரே முதன் முதலாக கொண்டுவந்துள்ளது. எதிர்காலத்தில் தொழிலாளர் சந்தையில் ஒரு உறுதித் தன்மையை ஏற்படுத்தும் என்பதாக கத்தார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Qatar Tamil)