ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய பாடசாலை மாணவர்களின் பேருந்து சேவைக்கு பயன்படும் பேருந்துகளுக்கு நிறப்பூச்சு பூசும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று அச்ச நிலை காணப்படுவதையடுத்தே ஜனாதிபதியின் ஆலோசணைக்கு அமைவாக பாடசாலை மாணவர்களுக்கு பிரத்தியேக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

