சம்மாந்துறை அன்சார் (இலங்கை)
சவுதி அரேபியாவில் பணிபுரியும் நம்மவர்களில் பலர் குறிப்பாக வீட்டுப் பணிப் பெண்கள், வீட்டுச் சாரதிகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிவோர் என பலரும் என்னைத் தொடர்பு கொண்டு தாங்கள் வேலை செய்யும் வீடுகளில் அல்லது நிறுவனங்களில் அனுபவிக்கும் கொடுமைகளை, சம்பளப் பிரச்சினைகளை, பாலியல் ரீதியிலான சீண்டல்களை, சித்திரவதைகளை, துாக்கமின்மைப் பிரச்சினை, உணவு வழங்கப்படாத பிரச்சினை, மருத்துவ உதவிகள் வழங்கப்படாத பிரச்சினை மற்றும் தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படாத பிரச்சினை என பலவற்றை முறையிட்டு இவற்றுக்கு நீதியினைப் பெற்றுக் கொள்ள வழிவகைகள் செய்ய முடியுமா..?? எவ்வாறு நாங்கள் எங்களுக்கான நீதியினைப் பெற்றுக் கொள்வது..?? எங்கே முறையிடுவது என கேட்பதுண்டு. அவ்வாறானவர்களுக்கு என்னால் முடிந்த வரை தீர்வும் பெற்றுக் கொடுத்து ஆலோசனைகளையும் வழங்கி நான் வருவதுண்டு. இதனை ஒரு பதிவாக எழுதுமிடத்து இது அனைவருக்கும் பயணுள்ளதாக இருக்கும் எனக் கருதி இதனை நான் எழுதுகின்றேன் தயவு செய்து முழுமையாக வாசித்து பயண்பெறுங்கள்.

மனித உரிமைகளுக்கான தேசிய அமைப்பானது சவுதி அரேபிய அரச அங்கீகாரம் பெற்று, அரச குடும்பத்தினரின் அனுமதியோடு சுயாதீனமாக இயங்கும் ஒரு மனித உரிமை அமைப்பாகும். இங்கு இஸ்லாமிய வரைமுறைகளுக்கு உட்பட்டும் அதேவேளை சர்வதேச மனித உரிமை ஆணைக்குழு, சவுதி அரேபிய மனித உரிமைகள் ஆணைக்குழுக்களின் விதிகளுக்கும் உட்பட்டும் பாதிக்கப்பட்டோருக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படுவதாக அறிய முடிகிறது. மனித உரிமைகளுக்கான தேசிய அமைப்பானது சவுதி அரேபிய பிரஜைகள் மற்றும் அங்கு பணிபுரியும் வெளிநாட்டினர் என அனைவருக்கும் எவ்வித பாகுபாடுமின்றி சேவையாற்றி வருவதாக அவர்களது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
“மனித உரிமைகளுக்கான தேசிய அமைப்பு - The National Society for Human Rights”. அமைப்பினரை நீங்கள் அவர்களது தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்தி அல்லது மின்னஞ்சல் அனுப்பி (ஈமெயில்) அல்லது தபால் மூலம் கடிதம் அனுப்பி அல்லது நேரடியாக விஜயம் செய்து உங்களது பிரச்சினைகள் தொடர்பாக அவர்களிடம் முறையிடலாம். அவர்களை தொடர்பு கொள்ளும் வழிகள் கீழே தரப்பட்டுள்ளன. அத்தோடு மேலதிக விபரங்களுக்கு http://nshr.org.sa இந்த லிங்கையும் கிளிக் செய்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
Principle Head Quarter: (Riyadh)
Riyadh – Muhamadiyah District
Al Gemaha Center – 4th floor
Phone: +966112102233
Fax: +966112102202 – +966112102201
P.O.Box: 1881 Riyadh: 11321
E-Mail: ryd@nshr.org.sa
Makkah Al Mokaramah Branch – Jeddah :
Jeddah – Muhamadiyah District – Al Madinah Descending Road
Phone: +96626222261
Fax: +96626222196
P.O.Box: 116664 Jeddah: 21391
E-Mail: jdh@nshr.org.sa
The Sacred Capital Office:
Phone: +96625545211
Fax: +96625545212
E-Mail: mkh@nshr.org.sa
Eastern Region Branch –Dammam:
Dammam: Al Shati District
Phone: +96638098353
Fax: +96638098354
P.O.Box: 15578 Dammam: 31454
E-Mail: shq@nshr.org.sa
Phone: +96673175566
Fax: +96673173344
P.O.Box: 476
E-Mail: jzn@nshr.org.sa
Al-Jouf Region Branch:
Sakaka- Al Aziziah District
Phone: +96646258144
Fax: +96646258155
P.O.Box: 2766
E-Mail: jwf@nshr.org.sa
Madina Almenora Branch:
Prince Abdelmohsen St. – The Building of the Capital Center for Businessmen
Phone: +96648664544
Fax: +96648664549
P.O.Box: 775 Madina: 41421
Aseer Region Branch
Ring Belt, the northern side, the intersection of Al Taif street with the belt, in front of Al-Abha Mall markets. building No. 24.
Phone: +966172269186
Fax: + 966172310349
P.O.Box: 4292 Abha: 61491
E-Mail:Asr@nshr.org.sa
உங்களது பிரச்சினைகள் தொடர்பாக முறைப்பாடுகள் தெரிவிக்க “மனித உரிமைகளுக்கான தேசிய அமைப்பு - The National Society for Human Rights” என்ற இந்த அமைப்பு தவிர்ந்த வேறு பல அமைப்புக்களுக்கும் நீங்கள் உங்களது பிரச்சினைகள் தொடர்பாக முறையிடலாம். சவுதி அரேபிய காவல் நிலையம், சவுதி அரேபிய அவசர பொலிஸ், சவுதி அரேபிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் உங்களது துாதுவராலயங்கள் போன்றவற்றுக்கும் நீங்கள் முறையிடலாம். அவைகளின் தொடர்பு விபரங்களும் கீழே தரப்பட்டுள்ளது.
01. சவுதி அரேபிய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தொடர்பு விபரம்.
கிளிக் https://hrc.gov.sa கிளிக் https://e-services.hrc.gov.sa/en/service/3
02. சவுதி அரேபிய அவரச போலிஸ் இலக்கம் - 911 இவ் இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி உங்களது பிரச்சினை தொடர்பாக முறைப்பாடு தெரிவித்தால் நீங்கள் இருக்கும் இருப்பிடத்திற்கு 10 நிமிடங்களுக்குல் பொலிஸ் வருகை தருவார்கள்.
03. இலங்கைத் துாதரகம் சவுதி அரேபியா - றியாத்.
தொலைபேசி - 00966114608232 / 0096614608235
ஈமெயில் - slemb.riyadh@mfa.gov.lk
04. இலங்கைத் துாதரகம் சவுதி அரேபியா - ஜித்தா
தொலைபேசி - 00966126065414 / 00966126065772 / 00966126063442
Toll Free 8001161188
ஈமெயில் - info@slcgjeddah.org / slcg.jeddah@mfa.gov.lk
05. சவுதியில் உள்ள இந்திய துாதுவராலய தொடர்பு விபரத்திற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் https://www.eoiriyadh.gov.in
குறிப்பு - சவுதி அரேபியாவில் நீங்கள் ஒப்பந்த அடிப்படையில் தரப்படும் ஊதியங்களுக்காக வேலை செய்பவர்களே தவிர இங்கிருப்பவர்களுக்கு அடிமைகள் கிடையாது அதனால் யாருக்கும் பயப்படத் தேவையில்லை, தைரியமாக உங்களது பிரச்சினைகள் தொடர்பில் பேசுங்கள்.