சவுதியில் உள்ள அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஆடை வரைமுறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தரப்பு ஊழியர்களும் சீருடை அணிய வேண்டும் என மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் அகமது அஹ்மத் அல்-ராஜி தெரிவித்துள்ளார்.
இந்த அமைச்சரவை ஆணை சவுதி தொழிலாளர் சட்டத்தின் 38 வது பிரிவின் ஒரு பகுதியாக பணியிடத்தில் பின்பற்றப்படும். மேலும், சீருடை அணியாத ஊழியர்களுக்கு நிர்வாகத்தினர் அபராதம் விதிக்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
செய்தி மூலம் - https://saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.